/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் அடுத்தடுத்து உறுதியாகும் HMPV தொற்று | HMPV | 3rd case | Jipmer | Puducherry |
புதுச்சேரியில் அடுத்தடுத்து உறுதியாகும் HMPV தொற்று | HMPV | 3rd case | Jipmer | Puducherry |
சீனாவில் வேகமாக பரவும் HMPV தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. பெங்களூரில் முதல் பாதிப்பு உறுதியான நிலையில் ஆமதாபாத், சென்னை, சேலம், நாக்பூரில் அடுத்தடுத்து பாதிப்பு பதிவானது. புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பிடலில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறி சிறுமி நலமுடன் வீடு திரும்பினார். அதன்பின் ஜிப்மர் மருத்துவமனையில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்த 5 வயது சிறுமிக்கும் HMPV தொற்று உறுதியானது. அவர் இப்போது சிகிச்சையில் உள்ளார். இந்த சூழலில் புதுச்சேரியில் 3வதாக 1 வயது பெண் குழந்தைக்கு HMPV தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜன 13, 2025