பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தொடரும் வெற்றி பயணம்! Men's Hockey | India | Paris Olympics
காலிறுதியை உறுதிசெய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி! பிரான்ஸ் நாட்டுல இருக்குற பாரிஸ் நகர்ல ஒலிம்பிக் போட்டி நடந்துட்டு இருக்கு. இந்த தொடர்ல இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பி பிரிவுல இடம் பிடிச்சு இருக்காங்க. முதல்ல நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில இந்தியா 3க்கு2 என்ற கோல் கணக்குல வின் பண்ணிட்டாங்க. அப்புறம் அர்ஜென்டினாவுக்கு எதிரா நடந்த போட்டியில 1க்கு1 என்ற கோல் கணக்குல டிரா பண்ணாங்க. இன்னைக்கு அயர்லாந்து கூட நடந்த மேட்சுல 2க்கு0 என்ற கோல் கணக்குல ஜெயிச்சாங்க. இந்திய பிளேயர் ஹர்மன் ப்ரீத் தான் அந்த ரெண்டு கோலையும் அடிச்சாரு. 3 போட்டில விளையாடி 2 போட்டில ஜெயிச்சு, 1 போட்டியில டிரா பண்ணி, 7 பாயிண்ட் வச்சு இருக்குற இந்தியா டீம் காலியிறுதி வாய்ப்பை உறுதி செஞ்சு இருக்கு. கடைசியா ஆகஸ்ட் 1ம் தேதி பெல்ஜியத்தோட லீக் போட்டி முடியப்போகுது.