இருந்த ஒரு தேவாலயம் மீதும் இஸ்ரேல் குண்டு போட்ட பகீர் holy family church gaza | israel IDF vs hamas
காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் புகுந்து தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழியாகவும் அவ்வப்போது குண்டு வீசி வருகிறது. 21 மாத சண்டையில் காசாவில் மட்டும் 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் பிணைக்கைதிகளை விடுதலை செய்து, போரை நிறுத்த ஹமாஸ் முன்வரவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 33 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் வீசிய குண்டு, காசாவில் இருக்கும் ஒரே ஒரு கத்தோலிக்க தேவாலயத்தையும் தகர்த்து விட்டது. சர்ச்சில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்கப்பட்ட தேவாலயம் பெயர் ஹோலி பேமிலி சர்ச். இதை ஜெருசலேம் கத்தோலிக்க சபை நடத்தி வந்தது. முஸ்லிம்கள் நிரம்பி வாழும் காசாவில் இருக்கும் ஒரே ஒரு கத்தோலிக்க தேவாலயம் இது தான். இதனால் உலக அளவில் தனித்துவமாக விளங்குகிறது. காசாவில் பரவலாக ஆங்காங்கே வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இங்கு தான் பிரார்த்தனைக்கு வருவார்கள். போரில் வீடுகளை இழந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சர்ச்சில் தஞ்சம் அடைய ஆரம்பித்தனர். உயிருக்கு பயந்து அங்கேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் தான் அங்கு இஸ்ரேல் குண்டு வீசி இருக்கிறது. தாக்குதலை கண்டித்த ஜெருசலேம் கத்தோலிக்க சபை, ‛சர்ச் மீது இஸ்ரேல் ராணுவம் நேரடியாக குண்டு வீசியது. அதன் பீரங்கி குண்டு விழுந்து சர்ச் மேற்கூரை நொறுங்கியது என்றது. இந்த சம்பவத்தை போப் லியோவும் கண்டித்தார். உடனடியாக காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தினார். இன்னொரு பக்கம் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் கோபத்தின் உச்சிக்கே போனார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு போன் செய்த அவர், சர்ச் மீது எப்படி குண்டு வீசலாம் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். அவரிடம் நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார். ‛இஸ்ரேல் வேண்டும் என்றே சர்ச் மீது தாக்குதல் நடத்தவில்லை. தவறுதலாக பீரங்கி வெடித்ததில் சர்ச் மீது குண்டு விழுந்து விட்டது. இந்த தவறுக்கு வருந்துகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டது.