உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலூர் மாணவர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் Cuddalore Student | Honour Killing | Madras HC | CBCID

கடலூர் மாணவர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் Cuddalore Student | Honour Killing | Madras HC | CBCID

கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசகுளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.காம். படித்து வந்தார். கடந்த மே 18ல் பைக்கில் சென்ற போது, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில் ஜெயசூர்யா ஆணவ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை முருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அரசு கணேசன் வாதாடினார். கல்லுாரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், மனுதாரரின் மகனை அடிக்கடி மிரட்டி உள்ளனர். கல்லுாரியில் உடன் படிக்கும் மாணவர் பிரவீன் என்பவர், மே 18ல் வலுக்கட்டாயமாக பைக்கில் ஜெயசூர்யாவை அழைத்து சென்றுள்ளார்; பின் வீடு திரும்பவில்லை. பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டதில், ஒரு முறை போனை எடுத்து, பிரவீன், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக மனுதாரரிடம் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் மனுதாரரை அழைத்து, சாலை விபத்தில் ஜெயசூர்யா இறந்து விட்டார் என, குள்ளஞ்சாவடி போலீசார் அவரது அப்பாவிடம் கூறியுள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தும், போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளனர். எனவே, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என அவர் வாதாடினார். அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், விசாரணை இன்னும் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மரணத்துக்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாராவது வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கொலை செய்தனரா என்பதை பிரேத பரிசோதனை வாயிலாக அறிய முடியுமா?

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி