உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் - அமெரிக்கா போர் முடிந்ததால் ஹார்முஸ் ஜலசந்தியை பயமின்றி கடக்கும் சரக்கு கப்பல்கள்

ஈரான் - அமெரிக்கா போர் முடிந்ததால் ஹார்முஸ் ஜலசந்தியை பயமின்றி கடக்கும் சரக்கு கப்பல்கள்

#IranIsrealWar #IranUSAwar #CrudeOil #HormuzStraitOpened #IndianShipsCrossedHormuz #IndiaUSA #BrentCrude #LPG #LNG ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மாேதலில் அமெரிக்கா தலையிட்டதால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூண்டது. இரு நாட்டு படைகளும் கடுமையாக சண்டையிட்டதால், மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவியது. ஈரான் நிர்வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், சர்வதேச சரக்கு கப்பல்கள் அவ்வழியே பயணிப்பதில் சிக்கல் நீடித்தது. கடந்த நான்கு மாதங்களாக போர் தொடர்ந்ததால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் நடுக்கடலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவிய போரால், கச்சா எண்ணெய் உற்பத்தி, சப்ளை பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. போருக்கு முன் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், போர் பதற்றம் உச்சத்தில் இருந்த நேரத்தில், எண்ணெய் விலை 110 டாலரை கடந்தது. இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குழு நடத்திய அமைதி பேச்சு வெற்றி பெற்றதை அடுத்த கடந்த வாரம் போர் முற்றிலும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 டாலரை எட்டியுள்ளது.

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை