உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 25வது தேசிய குதிரையேற்ற போட்டி கோலாகலம் | Horseding Competition | Aurovill | Puducherry

25வது தேசிய குதிரையேற்ற போட்டி கோலாகலம் | Horseding Competition | Aurovill | Puducherry

புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் ரெட் அமைப்பு சார்பில் ரெட் எர்த் குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியில் தேசிய குதிரையேற்ற போட்டி கோலாகலமாக துவங்கியது. இதில் ஆரோவில் மட்டுமின்றி சென்னை, கோவை, ஊட்டி, மும்பை, பெங்களூர் பகுதிகளில் இருந்து 100 குதிரைகளும், 200 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். நடைபயிற்சி, அலங்கார நடை, தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 15 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. மாலையில் டிரஸ்ஸேஜ் எனப்படும் குதிரை மற்றும் அதன் வீரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு போட்டியும் நடக்கிறது. உலகத்தரம் வாய்ந்த டிரஸ்ஸேஜ், ஷோ ஜம்பிங், கிராஸ்-கன்ட்ரி என குதிரையேற்றம் செய்பவர்களுக்கு சவால் விடும் பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 16ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை