தனியாக இருந்த சிறுமிகள்: ஓசூரில் நடந்த பயங்கரம் | Hosur | School Boys
5 பேரும் பள்ளி மாணவர்கள் அக்கா தங்கைக்கு பாலியல் சீண்டல் 14 வயது சிறுவர் கும்பலால் அதிர்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு பள்ளியில் படித்து வரும் 4 மாணவர்களும், அதே பகுதியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கட்டட வேலைக்கு செல்லும் சிறுவனும் நண்பர்கள். 5 பேருமே 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். கட்டட வேலை நடக்கும் பகுதிகளுக்கு சென்று அங்கே வீசப்படும் பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டைகளை விற்று கிடைக்கும் பணத்தில் ஊர் சுற்றி வந்துள்ளனர். பெற்றோர் கவனிப்பு இல்லாமல் போனதால் அடிக்கடி சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் ஓசூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பழைய இரும்பு, பேப்பர் சேகரிக்க சென்றுள்ளனர். அங்கே 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் அவர்களை நோட்டமிட்ட 5 சிறுவர்களும் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்டனர். வீட்டுக்குள் நுழைந்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அலறிய சிறுமிகள் பெற்றோரிடம் நடந்த கொடுமைகளை கூறியுள்ளனர். ஓசூர் மகளிர் போலீசில் சிறுவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஓசூரில் தெருவில் விளையாடிய சிறுமி தண்ணீர் குடிக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டல் செய்தனர். இப்போதும் அதே போல நடந்துள்ளது. ஓசூரில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.