ஹவுதிகளுக்கு 7 மடங்கு அதிக பதிலடி: கொந்தளிக்கும் நெதன்யாகு | Houthi Missile Attack | Israel
இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இடையே ஒரு வருடத்துக்கு மேலாக போர் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவாக உள்ளனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிராக அரபிக்கடல், செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஹவுதி பயங்கரவாதிகள் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் ஏர்போர்ட்டை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரின் ஏர்போர்ட்டை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அயர்ன் டோம் எனப்படும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை ஏர்போர்ட் ஓடுதளம் அருகே இருந்த சாலையில் விழுந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஏர்போர்ட்டில் விமான இயக்கம் சில நிமிடங்கள் ரத்து செய்யப்பட்டது.