உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மினரல் வாட்டர் பிஸினஸ் செய்வதாக சொல்லி டீசல் வேட்டை | HPCL | Rajasthan | Jaipur Gang

மினரல் வாட்டர் பிஸினஸ் செய்வதாக சொல்லி டீசல் வேட்டை | HPCL | Rajasthan | Jaipur Gang

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் HPCL எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிபொருள் குழாய் செல்கிறது. அதில் பக்ரு பகுதியில் மட்டும் குழாய் வழியே செல்லும் எரிபொருள் அழுத்தம் குறைவாக இருப்பதாக HPCL அதிகாரிகள் தெரிவித்தனர். பெரிய அளவில் டீசல் திருட்டு நடந்திருக்கலாம் என போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கல்வாட் பகுதியில் இருந்து பக்ரு பகுதி வரை எரிபொருள் கசிவுக்கான ஆரம்ப புள்ளியை கண்டறிய நடவடிக்கை தொடங்கினர். HPCL குழாய் எந்த வழியாக செல்கிறது என்பதை மேப் மூலம் குறித்து வைத்து ரகசிய திட்டம் வகுத்தனர். ஒவ்வொரு வீடாக சென்று விசாரணை நடத்தினர். சுமார் 1000 வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடந்தது. மூன்று நாட்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு பிறகு HPCL குழாய் செல்லும் பகுதியை ஒட்டிய காலனியில் உள்ள ஒரு வீட்டின் மீது சந்தேகம் வந்தது. மினரல் வாட்டர் பிஸினஸ் நடக்கிறது என கூறப்பட்ட அந்த வீட்டுக்கு கனரக டேங்கர் லாரிகள் சில முறை வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அங்கிருந்து அடிக்கடி பெட்ரோல்,டீசல் வாசம் வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் சந்தேகத்துக்கு இடமான வீட்டை சல்லடை போட்டு தேடினர். வீட்டுக்குள் குடிநீர் தொட்டி இருப்பது போல குழி தோண்டப்பட்டு, அது 25 அடி ஆழம் வரை சென்றுள்ளது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ