வீட்டுச்சிறையில் எச்.ராஜா: எஸ்.பி.யுடன் கடும் வாக்குவாதம் H.Raja | BJP Senior leader| Karaikudi| SP
திருப்பரங்குன்றம் மலையை காக்க இன்று தடையை மீறி அறப்போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிம் அறிவித்தார். தடையை தாண்டி மக்கள் எழுச்சியுடன் அறப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் கூறி இருந்தார். திருப்பரங்குன்றத்தை நோக்கி தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த இந்து முன்னணி தொண்டர்கள், பாஜவினர் செல்லத் தொடங்கினர். அவர்களை ஆங்காங்கே போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வராவும் கைது செய்யப்பட்டார். பாரதிய ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா காரைக்குடி அழகாபுரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வேலுடன் காரில் திருப்பரங்குன்றம் புறப்பட முயன்றார். சிவகங்கை எஸ்.பி. பார்த்திபன் அவரைத் தடுத்து நிறுத்தி, தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் போக கூடாது என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்களை கைது செய்வதாகவும் கூறினார். அதைத ஏற்க மறுத்த ராஜா மதுரையில்தானே 144 தடை உத்தரவு; சிவகங்கையில் இல்லையே.. மதுரை எல்லை வரை செல்ல எனக்கு உரிமை இருக்கிறது என எஸ்.பி. பார்த்திபனுடன் வாதிட்டார்.