உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்து விரோத கட்சிகளை 2026ல் தோலுரித்து காட்டுவோம் H.Raja bjp senior leader Waqf Amendment Bill

இந்து விரோத கட்சிகளை 2026ல் தோலுரித்து காட்டுவோம் H.Raja bjp senior leader Waqf Amendment Bill

2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். அதற்கு முன் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற பாஜ தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், பழனிசாமியை நம்பி அண்ணாமலையை மாற்ற வேண்டாம் என பாஜ தேசிய தலைமைக்கு இமெயில்கள் பறக்கின்றன. 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 18 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை முன்னெடுக்கும் அரசியலுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நேரத்தில் புதிய தலைவரை நியமித்தால் சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்து விடும் எனவும் அமித் ஷாவுக்கு அனுப்பிய மெயிலில் அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி