/ தினமலர் டிவி
/ பொது
/ தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்! Human Animal Conflict |Nilgiris
தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்! Human Animal Conflict |Nilgiris
கோவை வன கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிகளில் சில வாரங்களாக வெயில் அதிகரித்துள்ளது. பனிக்காலம் முடிந்து தற்போது வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தடாகம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன. மனித விலங்கு மோதலும் அதிகரித்துள்ளது.
பிப் 06, 2025