உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழக்கை விசாரணைக்கு எடுத்தது மனித உரிமைகள் ஆணையம் | Human Rights Commission | Nellai Police

வழக்கை விசாரணைக்கு எடுத்தது மனித உரிமைகள் ஆணையம் | Human Rights Commission | Nellai Police

திருநெல்வேலியில் முன்னாள் எஸ்ஐ ஜாஹிர் உசேன் மார்ச் 18 அன்று தொழுகை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில் அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. வழக்கில் கார்த்திக், அக்பர் ஷா ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக, பிளஸ் 1 மாணவன் உட்பட இதுவரை 5 பேர் கைதாகி உள்ளனர். இந்த சூழலில் இப்போது இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு டிஜிபி மற்றும் திருநெல்வேலி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ