மாமியார் கொடுத்த அந்த புகார்; மொத்த உண்மையும் வெளிவந்தது
நாமக்கல், பொத்தனூரை சேர்ந்தவர் ஜெகதீசன். இந்து முன்னணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். வீட்டில் இருந்த இவரது மனைவி கீதா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெகதீசனுக்கும் தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மனைவி கீதாவை வெட்டி கொன்றதாகவும், தடுக்க முயன்ற தம்மையும் வெட்டியதாக போலீசில் ஜெகதீசன் தெரிவித்தார். காயமடைந்திருந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொலை தொடர்பாக போலீசார் முற்கட்ட விசாரணையில் இறங்கினர். ஆனால், ஜெகதீசன் சொன்னதுபோல், வெளியாட்கள் வந்து சம்பவம் செய்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. அதே சமயம் கீதா கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டது போல் இல்லை. கழுத்து மட்டும் அறுக்கப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.