உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கால்வாயில் தத்தளிக்கும் இளம்பெண்: வைரல் வீடியோ

கால்வாயில் தத்தளிக்கும் இளம்பெண்: வைரல் வீடியோ

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. அதன் அழகை ரசித்த அவர்கள், பாலத்தில் இருந்து குடும்பத்துடன் செல்பி எடுக்க முயன்றனர். பாலத்தின் தடுப்பு கம்பிகள் மீது ஏறி செல்பி எடுத்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பெண் தவறி கால்வாயில் விழுந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, சிலர் கயிறு கட்டி மீட்க முயன்றனர். 2 பேர் கால்வாயில் குதித்து பெண்ணின் உடலில் கயிறு கட்டினர். பாலத்தின் மேலே இருந்து சிலர், அந்த பெண்ணை கயிறு மூலம் தூக்க முயன்றனர். பாதி வரை தூக்கினர். பின் அது முடியவில்லை. மீண்டும் அவரை கால்வாயில் இறக்கிவிட்டு கரைக்கு கயிறு மூலம் இழுத்து வந்து காப்பாற்றினர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி