சென்னை ஐசிஎப்பில் பெட்டிகள் தயாரிப்பு பணி
ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் நோக்குடன் பல திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது. சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளை தொடர்ந்து, ைஹட்ரஜன் ரயிலை இயக்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. முதல் ரயிலின் சோதனை ஒட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் டில்லிக்கு அருகில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அக் 04, 2024