உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்ச்சை IAS அதிகாரி பூஜா கேட்கர் பயிற்சி ரத்து | IAS Officer Pooja Khedkar

சர்ச்சை IAS அதிகாரி பூஜா கேட்கர் பயிற்சி ரத்து | IAS Officer Pooja Khedkar

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர், வயது 34. பூஜா தனக்கு சொந்தமான ஆடி காரில் சட்டத்துக்கு புறம்பாக மகாராஷ்டிரா அரசு ஸ்டிக்கரையும் சிவப்பு சைரன் விளக்கையும் பயன்படுத்தி இருக்கிறார். அரசுக்கு இதுபற்றி புகார்கள் பறந்ததும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐஏஏஸ் தேர்வில் மதிப்பெண் சலுகைகள் பெற, தனக்கு பார்வைத்திறன் குறைபாடு இருப்பதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். பூஜாவின் தந்தை திலிப்ராவ் கேத்கர், முன்னாள் அரசு அதிகாரி , நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டவர். வேட்பு மனுவில் ஆண்டு வருமானம் 43 லட்ச ரூபாய் என்றும், ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் எனவும் பூஜா கேட்கரின் தந்தை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தந்தையின் வருமானத்தை குறைத்து காட்டி பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் சலுகை பெற்றார் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை