உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருத்துவ விடுப்பில் சென்றவர் பதுங்கினாரா? | IAS Visagan | TASMAC | Tasmac Case | Senthil Balaji

மருத்துவ விடுப்பில் சென்றவர் பதுங்கினாரா? | IAS Visagan | TASMAC | Tasmac Case | Senthil Balaji

திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் மது கொள்முதல் மற்றும் விற்பனையில் பல கோடி முறைகேடு நடந்துள்ளததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நெருங்கிய நண்பர் ரத்தேஷ்ராஜ் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகன் உட்பட ஏழு பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி முன்ஜாமின் பெற்றுள்ளார். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தேடப்படும் ரத்தேஷ்ராஜ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகன் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும் முறைகேடுக்கும் நேரடி தொடர்பு இருப்பதால் கைது நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. அவர்களை தேடி வருகிறோம். விசாகன் மருத்துவ விடுப்பில் சென்று இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவர் வீட்டில் இல்லை. எங்கே இருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கிறோம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர். #IASVisagan | #TASMAC | #TasmacCase | #Senthil Balaji | #DMK | #DVAC

ஆக 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி