/ தினமலர் டிவி
/ பொது
/ 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல்! ICC Womens Under-19 T20 World Cup
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல்! ICC Womens Under-19 T20 World Cup
மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான டி-20 உலககோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 20 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் திரிஷா 3, பருனிகா, ஆயுஷி, வைஷ்ணவி தலா 2 விக்கெட் சாய்த்தனர். சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, திரிஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது, தமிழகத்தின் கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.
பிப் 02, 2025