உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலையில் ஆய்வு செய்த நிபுணர் குழு சொன்னது என்ன? IIT experts inspection tiruvannamalai landslide 7 di

மலையில் ஆய்வு செய்த நிபுணர் குழு சொன்னது என்ன? IIT experts inspection tiruvannamalai landslide 7 di

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தீப மலையின் கிழக்கு பக்கத்தில் வஉசி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு ராஜ்குமார் என்பவரது வீட்டில் விழுந்ததில் வீடு மண்ணில் புதைந்தது. ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா மற்றும் உறவுக்கார சிறுமிகள் மகா, ரம்யா, வினோதினி ஆகியோர் உயிரிழந்தனர். நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3வது நாளாக இன்று மீட்புப்பணி தொடர்ந்தது. மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை ஐஐடி நிபுணர் குழுவினர் நிலச்சரிவு நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், நாராயணராவ், பூமிநாதன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ