கச்சேரி டிக்கெட் வைத்திருந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம்! Ilayaraja Music Concert | Nandanam
சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டணம் இல்லா பயணத்தை வழங்க முடிவு செய்துள்ளது. கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இதற்காக பிரத்யேக பாஸ் வழங்க உள்ளனர். கச்சேரி போகவும், இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்ப வரவும் ஒரு முறை மட்டும் இந்த பாஸ் பயன்படும். கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் டிக்கெட்டில் உள்ள க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து கொள்ளலாம். இந்த வசதியை ரசிகர்கள் பயன்படுத்தி அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.