உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசார் நடத்திய ஆய்வில் அம்பலம்! | illegal Liquor sales | TN Police

போலீசார் நடத்திய ஆய்வில் அம்பலம்! | illegal Liquor sales | TN Police

2001ல் கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் சாராயம் குடித்து, 53 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பறிபோனது. அதே ஆண்டு சென்னை செங்குன்றம், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் சாராயம் குடித்து 30 பேர் இறந்தனர். அதன்பிறகு தமிழகத்தில் கள்ள சாராயத்திற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பின் 2023ல் மீண்டும் சாராய மரணம் அதிகரித்தது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் 21 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, கருணாபுரம் மற்றும் சின்ன சேலம் அடுத்த மாதவச்சேரி பகுதியில் சாராயம் குடித்து 69 பேர் மரணம் அடைந்தனர். எத்தனால் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, போலீசார் கூறினர். ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தொழில் அமோகமாக நடக்கிறது. சமீபத்தில் போலீசார் நடத்திய ஆய்வில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்தில் சாராய விற்பனை மீண்டும் தலைதுாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. சாராய ஊறல் அழிப்பு மற்றும் வியாபாரிகளை கைது செய்யும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சாராய ஒழிப்பு பணியில் சட்டம், ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் இணைந்து செயல்படுகின்றனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை