உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹5,832 கோடி தாது ஊழல்: அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் | illegal beach sand mining | CBI

₹5,832 கோடி தாது ஊழல்: அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் | illegal beach sand mining | CBI

திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள், அதிக விலை மதிப்புள்ள தாது உப்புகள் உள்ளன. கனிமவள ஏற்றுமதி நிறுவனங்களான இவற்றை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக 2012ம் ஆண்டு புகார் எழுந்தது. வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 2013ம் ஆண்டு தூத்துக்குடி கலெக்டர் இது தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தினார். இந்த குழுவின் பல கட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து 2013ல் தமிழகம் முழுவதும் தாது மணல் அள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சிறப்புக் குழு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த நிலையில் 2015ம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் ராஜமாணிக்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 2000ம் முதல் 2016ம் ஆண்டு வரை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை