உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாணியம்பாடியில் பாக்கெட் சாராயம் பறிமுதல்: முதியவரிடம் விசாரணை! Illicit liquor | Vaniampadi liquor

வாணியம்பாடியில் பாக்கெட் சாராயம் பறிமுதல்: முதியவரிடம் விசாரணை! Illicit liquor | Vaniampadi liquor

பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் சாராய விற்பனை ஜோர்! டிஸ்க்: வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில், சந்தேகத்திற்குரிய வகையில் முதியவர் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற போலீசார், சற்று தொலைவில் இருந்தபடியே முதியவரின் செயல்பாடுகளை கவனித்தனர். கையில் ஒரு பை வைத்திருந்த முதியவர், தண்ணீர் போன்ற திரவம் நிரப்பிய சிறிய பாக்கெட்டுகளை அதிலிருந்து வெளியே எடுத்து விற்பனை செய்ய முயன்றார். முதியவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், பாக்கெட்டில் இருப்பது என்ன என விசாரித்தனர். முதியவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் இருந்த பையை பறிமுதல் செய்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவரிடம் இருந்தது சாராய பாக்கெட்டுகள் என தெரிய வந்தது. அவரது பையில் இருந்த 20 சாராய பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி