உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நள்ளிரவு முதல் கரையை கடக்கும் புயல்; கொட்டுது கனமழை | IMD | Deep Depression | Cyclone 'Murasu'

நள்ளிரவு முதல் கரையை கடக்கும் புயல்; கொட்டுது கனமழை | IMD | Deep Depression | Cyclone 'Murasu'

வங்க கடலில் உருவான முரசு புயல் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியான ஒங்கோல் அருகே நள்ளிரவில் கரையை கடக்கத் துவங்கியது. அங்கு மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. நள்ளிரவு முதல் ஒங்கோல், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது. காலை 5 மணி நிரலவரப்படி புயலின் மையப்பகுதியான கண் பகுதி கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்தில் உள்ள வானிலை ரேடார்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது. புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IMD | #DeepDepression | #CycloneMurasu | #Murasu | #CycloneAlert | #Rain | #HeavyRain | #RainAlert | #RainNews | #BayofBengal

நவ 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !