உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம், புதுச்சேரியில் 2 வரை மழை பெய்யும் IMD | Weather Report | Chennai Rain | waterlogging |

தமிழகம், புதுச்சேரியில் 2 வரை மழை பெய்யும் IMD | Weather Report | Chennai Rain | waterlogging |

சென்னையில் ஒருவாரம் மழை தொடர வாய்ப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் நேற்றிரவு துவங்கி, விடிய விடிய மழை பெய்தது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு நாள் மழைக்கே இந்த நிலையா என மக்கள் கவலை அடைந்தனர். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நேற்று கன மழை பெய்தது. சென்னையில் இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ., அண்ணா நகர் மேற்கில் 12 செ.மீ., மணலி புதுநகரில் 10 செ.மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ.மீ., வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ.மீ., மாதவரத்தில் 7 செ.மீ மழை பெய்தது. ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு வந்ததால், ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதிகளுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, மேற்கு மற்றும் தென்மேற்கு திசை காற்றை ஈர்த்ததன் காரணமாக ஆந்திராவில் பெய்ய வேண்டிய கனமழை சென்னையில் பெய்துவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறினார்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !