12 ஊர்களில் ஊற்றும் கனமழை... முக்கிய வானிலை அப்டேட் imd chennai | heavy rain alert | weather today
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கை: தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித்தீர்க்கும். நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறி உள்ளது. #imdchennai #heavyrainalert #tnweathertoday #ChennaiWeather #TamilNaduRain #WeatherUpdate #RainyDays #ChennaiAlert #Rainfalls #MonsoonSeason #FloodWarning #WeatherForecast #ChennaiRains #StormWatch #NammaChennai #TamilNaduWeather #WeatherNews #RainyChennai #ChennaiMetrology