கனமழை கொட்டி தீர்க்கும் 6 மாவட்டங்கள்: வெளியான வானிலை அப்டேட் IMD Chennai | TN Weather | Rain Alert
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதேபோல், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரையும் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் ஆகஸ்ட் 8ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் ஆகஸ்ட் 3ம் தேதி நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை இரண்டு நாள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்யும் என்று வானிலை மையம் கூறி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 6 வரை தமிழக கடலோர பகுதிகள், வங்க கடல், அரபி கடலில் சூறாவாளி வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TamilnaduWeatherUpdate #WeatherForecast #HeavyRain #RainNews #RainUpdate #TamilNadu #RainySeason #Monsoon2026 #ClimateUpdate #WeatherReport #RainAlert #WeatherConditions #Forecasting #TamilNaduRain #Nature #WeatherWatch #StormWarning #RainyDays #TamilWeather