17 ஊரில் ஊற்றப்போகும் கனமழை: முக்கிய அப்டேட் chennai rain | tn weather today | imd heavy rain alert
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கனமழை பெய்து வருகிறது. 14ம் தேதி வரை இந்த கனமழை நீடிக்கும் என்று இப்போது சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதி மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகள் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 14ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். கோவை மாவட்ட மலை பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சனிக்கிழமையை பொறுத்தவரை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரியிலும், ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்க்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறி உள்ளது. இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரியின் கீழ் கோத்தகிரியில் 130 மில்லி மீட்டர், ஈரோடு குண்டேரிப்பள்ளம் பகுதியில் 90, உடுமலைப்பேட்டையில் 70, காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் 60, கடலூர் புவனகிரி, ராணிப்பேட்டை கலவை, கோடநாடு, விழுப்புரம் சூரப்பட்டு பகுதிகளில் தலா 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. #RainToday #TamilNaduRainAlert #ChennaiRainToday #TamilNaduWeatherAlert #WeatherUpdate #ChennaiWeather #RainyDay #TamilNadu #Chennai #WeatherForecast #RainAlert #ClimateUpdate #StormWatch #WeatherNews #RainySeason #Monsoon #StaySafe #WeatherWarnings #LocalWeather #ChennaiRain