17 ஊர்களில் ஊற்றும் கனமழை: முக்கிய அப்டேட் | chennai rain | tn weather today | imd heavy rain alert
தமிழகத்தில் ஒரு வாரம் மேலாக பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், 19ம் தேதி வரை இந்த கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகள் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. இன்று கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதன்கிழமை திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்க்கும். வியாழக்கிழமையை பொறுத்தவரை கோவை மாவட்ட மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமையை பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சனிக்கிழமையை பொறுத்தவரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட மலை பகுதி, நீலகிரி, கன்னியாகுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறி உள்ளது. #RainToday #TamilNaduRainAlert #ChennaiRainToday #TamilNaduWeatherAlert #WeatherUpdate #ChennaiWeather #RainyDay #TamilNadu #Chennai #WeatherForecast #RainAlert #ClimateUpdate #StormWatch #WeatherNews #RainySeason #Monsoon #StaySafe #WeatherWarnings #LocalWeather #ChennaiRain