உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் மழை எப்போது? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு|IMD|Railalert|Cyclone

தமிழகத்தில் மழை எப்போது? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு|IMD|Railalert|Cyclone

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இது, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வடக்கு அந்தமான் கடல் பகுதி வரை காற்றழுத்தத்தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை 24ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கபட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 25 மற்றும் 26ம் தேதிகளில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈராேடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுாரில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை