கனமழை பட்டியலில் உள்ள தமிழக மாவட்டங்கள்
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 2 தினங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வரும் 12ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப் 06, 2025