புதையலாக கிடைத்த சிலைகள் வீட்டில் பதுக்கல்
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். சாக்கு மூட்டைகளில் பழங்கால ஐம்பொன் சிலைகள் இருந்தன. காரில் வந்த மூவரிடம் விசாரித்தனர். சிலைகளுக்கான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். திரிபுராந்தகர், வீணாதார தட்சிணாமூர்த்தி, ரிஷபதேவர், 3 அம்மன் சிலைகள் என 6 சிலைகள் கைப்பற்றப்பட்டன. அவை, இரண்டே முக்கால் முதல் மூன்றே கால் அடி உயரம் உடையவை.
ஜூலை 08, 2024