ஆஸ்திரேலியாவை 295 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா | Ind Aus test | Border gavaskar trophy
ஆஸியை நசுக்கிய இந்தியா நம்பர் 1 இடத்தை தட்டி தூக்கியது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் ஆனார். முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 104 ரன்னில் சுருண்டது. 46 ரன் முன்னிலையுடன் இந்தியா தனது 2வது இன்னிங்சை துவங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள், 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினர். 2வது இன்ன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது.