இந்தியாவில் சதி? 3 பயங்கரவாதிகள் பற்றி பகீர் | ind vs pak | bihar JeM terrorist | nepal | pahalgam
காஷ்மீரின் பஹல்காமில் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டது. அதே பாணியில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது பீகாருக்குள் புகுந்து இருப்பதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இப்படியொரு பரபரப்பு தகவலை நம் உளவுத்துறை வெளியிட்டது. நேபாளம் வழியாக 3 பயங்கரவாதிகள் பீகாருக்குள் நுழைந்து இருக்கின்றனர். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். ஒருவன் பாகிஸ்தானின் ராவில்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி; இன்னொருத்தன் உமர்கோட் பகுதியை சேர்ந்த ஆடில் ஹுசைன்; மூன்றாவது நபர் பஹவல்பூரை சேர்ந்த