இந்தியாவுக்கு US-ல் இருந்து பாக் அணு குண்டு மிரட்டல் ind vs pak | ind vs us | pahalgam | asim munir
அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப் வழக்கம் போல் இந்தியாவுடன் நெருக்கம் காட்டினார். திடீரென அவரது பாசம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. இப்போதெல்லாம் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானுக்காகவே பேசுகிறார். குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே அமெரிக்கா நடந்து கொண்டது. போர் முடிந்த பிறகு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீரை அழைத்து மதிய விருந்து கொடுத்து சிறப்பித்தார் டிரம்ப். பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து எந்த ராணுவ தளபதியையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்தது இல்லை. ஆனால் டிரம்ப் அதை செய்தார். அப்போது 5 நாட்கள் அசிம் முனீர் அமெரிக்காவில் தங்கி இருந்தார். அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே பல ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது மீண்டும் டிரம்ப் நிர்வாகம் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றிருக்கிறார் அசிம் முனீர். புளோரிடா மாகாணம் டம்பாவில் தொழில் அதிபர் ஆட்னன் ஆசாத் நடத்திய டின்னர் விருந்தில் பங்கேற்ற முனீர், அணு ஆயுதம் வீசி இந்தியாவையே அழித்து விடுவோம் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.