உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியே போ! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை ind vs pak| pok issue |ashim muneer |kashmir issue

வெளியே போ! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை ind vs pak| pok issue |ashim muneer |kashmir issue

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அந்நாட்டு முப்படை தளபதி அசிம் முனீரும் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் செய்தனர். முசாபராபாதில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில் ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அவர் பேசியது: காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தானின் அங்கமாகும். காஷ்மீரிகளுக்கு சுய நிர்ணய உரிமை வழங்குவதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. காஷ்மீர் பிரச்னை சர்வதேச மனித உரிமை பிரச்னை. பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் இந்தியா வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் சதிகளால் தெற்காசியாவில் நீடித்த அமைதி ஏற்படாது என்றார். இதே போல் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதிக்கு சென்ற முப்படை தளபதி அசிம் முனீர், அங்குள்ள ராணுவ நிலைகளை பார்வையிட்டு பாகிஸ்தான் வீரர்களை உசுப்பேற்றும் வகையில் பேசி இருக்கிறார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த போரில் இந்தியாவிடம் மரண அடி வாங்கியதை எல்லாம் மறந்து விட்டு மீண்டும் பாகிஸ்தான் தலைவர்கள் வாய் சவடால் விடுகின்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் நெருக்கடியை அனுபவித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் மற்றும் முப்படை தளபதி முனீர், மக்களின் கவனத்தை திசை திருப்பவே காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்து இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிப் 07, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
பிப் 07, 2026 10:18

மற்றநாடுகள் மதசார்பற்ற நாடாக யிருக்கவேண்டும். இவர்கள் நாடு மட்டும் மதவாதி நாடாக இருக்க வேண்டும். பொதுவாக மதவாதி நாடுகள் மதவெறிப் பிடித்த நாடாக மாறுகின்றது. இவர்களை சரியாக புரிந்துக் கொள்ளாமல் தமிழக முதல்வர் தமிழகத்தில் மதச் சார்பற்றக் கொள்கையை பரப்புகின்றாராம். இவருக்கு தேவையில்லாத வேண்டாத வேலையிது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இவர் சரியாக புரிந்து வைத்துள்ளாரா? அவர்தான் பதில் சொல்லவேண்டும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ