சிறந்த போர் விமானம் ரஃபேல்: டசால்ட் நிறுவனம் திட்டவட்டம் |Ind Vs Pakistan| Rafale |dassault ceo
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை விமான கண்காட்சி நடக்கிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் பிரான்சின் டசால்ட் நிறுவனமும் இதில் பங்கேற்க உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் பாரிஸ் வந்துள்ளார். கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது இந்தியாவின் 3 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது. அதை எரிக் டிராப்பியர் நிராகரித்தார். அது குறித்து அவர் கூறியது ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து இந்தியா எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. என்ன நடந்தது என்பது தெரியாது. அதே சமயம் பாகிஸ்தான் சொல்வது தவறானது என்பது எங்களுக்கு தெரியும். போர் விமானங்களை இயக்கும்போது, நீங்கள் ஒரு பணியை செய்து முடிக்கிறீர்கள். அந்த செயலின் வெற்றி என்பது அதனுடைய நோக்கத்தை அடைவதுதான். இழப்புகள் இல்லாமல் இருப்பது என்பது கிடையாது.