பயங்கரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கி சண்டை: காஷ்மீரில் பதற்றம் | India - Pak War|Jammu| Katra
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் என கடந்த சில தினங்களாக ஜம்மு - காஷ்மீர் முழுதும் பதற்றம் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது பெரும்பாலான இடங்களில் அமைதி திரும்பியுள்ளது. அக்னுார், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதால், சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு, நேற்று முதல் ஹெலிகாப்டர் சேவை துவங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. அதே சமயம் ரஜோரியில் பாக்., படைகள் வீசிய பல குண்டுகள் வெடிக்காமல் கிடப்பதால், அவற்றை கண்டறிந்து செயல் இழக்கச் செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவந்திபுராவின் சில பகுதிகளில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்து, ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. காலை முதல் நடந்து வரும் வேட்டையின் போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.