உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: சதமடித்து அசத்தினார் கோஹ்லி! | India - Pakistan

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: சதமடித்து அசத்தினார் கோஹ்லி! | India - Pakistan

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடியது. அந்த அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் 15 பந்தில் 20 ரன் குவித்த போது அவர் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து கில்லுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 100 ரன்களை எட்டிய போது, அரைசதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், 46 ரன்னில் அவுட்டானார். பிறகு, கோலியுடன் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடினார். சிறப்பாக ஆடிய கோலி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னில் அவுட்டானார். வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். இதன்மூலம், 42.3 ஓவர்களில் இந்திய அணி 244 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே, வங்கதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை