/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்கா- இந்தியா உறவு புதிய உயரங்களை எட்டுவதாக ஐஸ் | india- us ties| pm modi in China
அமெரிக்கா- இந்தியா உறவு புதிய உயரங்களை எட்டுவதாக ஐஸ் | india- us ties| pm modi in China
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்தியாவுக்கு அமெரிக்கா அபராதமாக 50 சதவீத வரியை விதித்துள்ளது. அதே சமயம் சீனா உடனும் அமெரிக்க வரி வர்த்த போர் நடத்துகிறது. பொருளாதார ரீதியாக இந்தியா, ரஷ்யா, சீனாவை அமெரிக்கா பகைத்து கொண்டுள்ள நிலையில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் நெருக்கமாக நட்பு பாராட்டியது அமெரிக்கா வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. இச்சூழலில்தான், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், இந்தியா-அமெரிக்கா நட்பை போற்றி டைமிங் ஆக ஒரு பதிவை பகிர்ந்தது.
செப் 01, 2025