உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் அணி திரள இந்தியா அழைப்பு India against Terrorism|Randeer Jaiswal

பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் அணி திரள இந்தியா அழைப்பு India against Terrorism|Randeer Jaiswal

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துார் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க அனைத்து கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏழு எம்பிக்கள் தலைமையிலான இந்த குழுவினர், உலகின் 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க உள்ளனர். இவர்களில் 3 குழுவினர் ஏற்கனவே வெளிநாட்டு பயணத்தை துவங்கிவிட்ட நிலையில், மேலும் 4 குழுவினர் தொடர்ந்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை, நமக்கு மிக நெருங்கிய 33 நாடுகளிடம் எடுத்துரைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் பல, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன. நம் எம்பிக்கள் குழுவில் அனைத்து கட்சி எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர். இது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கும். இந்தியாவுக்கு எதிராக, 40 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை துாண்டி வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரித்

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !