கோவையில் எலக்ட்ரிக் டூ வீலர் உற்பத்தி ஆலை துவக்கம்
இந்தியா - பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இரட்டை சமூக பாதுகாப்பு பங்களிப்பு ஒப்பந்தம் ஆகியவை, நாளை ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இது, சமீப காலத்தில் இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும். இந்திய சேவை துறை நிறுவனங்களுக்கும், தொழில் முறை நிபுணர்களுக்கும், பிரிட்டனில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். இதன்படி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், கடல் சார்ந்த பொருட்கள், பொறியியல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், காலணிகள், ஜவுளி ஆடைகள், ரசாயன பொருட்கள் மற்றும் மருந்துகள் மீதான பிரிட்டனின் இறக்குமதி வரிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #IndiaBrittainNewTradeAggrement #Trade #CommerceNews #India #UK #BussinessNews #Dinanalar