ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் 12வது சீசன், பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்தது. இந்தியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. ஜப்பான், கஜகஸ்தான், வங்கதேசம், சீனா, தைபேஆகிய 4 நாடுகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இந்தியா சீனா, மலேசிய தென்கொரிய சூப்பர் 4சுற்றுக்கு முன்னேறின. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரிய அணிகள் மோதின. விறுவிறுப்பதாக நடந்த ஆட்டத்தில் இந்தியா 4க்கு 1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 4வதுமுறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடுத்தாண்டு நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றது.
செப் 08, 2025