உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவம் வேறல் லெவல்: அசர வைக்கும் ஆய்வறிக்கை | India Military Budget 2047

ராணுவம் வேறல் லெவல்: அசர வைக்கும் ஆய்வறிக்கை | India Military Budget 2047

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. CII எனப்படும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான KPMG வெளியிட்ட அறிக்கையில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும். ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, அப்போது 3வது பெரிய நாடாக உருவெடுக்கும். இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25ல் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது 2047ல் 8.8 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி இப்போது 30,000 கோடியாக உள்ளது. இது 2047ல் 2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய சப்ளையராக இந்தியா இருக்கும்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ