இந்தியாவை டோட்டலா முடிக்க பயங்கர சதி-பகீர் பின்னணி saarc | india vs china | ind vs pak | bangladesh
ஆசிய கண்டத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சியை விரும்பாத சீனா, நம் பரம எதிரியான பாகிஸ்தானையும் புது எதிரியான வங்கதேசத்தையும் பகடை காயாக வைத்துக்கொண்டு நம் நாட்டுக்கு எதிராக மிகப்பெரிய சதியில் இறங்கி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நரி தந்திர செயலில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் இறங்கி இருப்பதன் பின்னணி என்ன? புதிய கூட்டமைப்பு வந்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? மூன்று நாட்டின் சதியை இந்தியாவால் முறியடிக்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தானுடன் நமக்கு ஒரு காலத்திலும் நல்ல உறவு இருந்ததில்லை. அப்படி தான் சீனாவும் கூட.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். பாகிஸ்தான் நமக்கு எதிரி என்று சொல்லிவிடும். ஆனால் சீனா அதை வெளிப்படையாக சொல்லாது.
நல்லுறவு பேண விரும்புவது போல் காட்டிக்கொண்டு நயவஞ்சகமாக செயல்படும். எனவே தான் சீனா பாகிஸ்தானை விடவும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் வங்கதேசம். சேக் ஹசீனா பிரதமராக இருந்தவரை, தனது முதல் நண்பன் இந்தியா தான் என்று வங்கதேசம் அடித்து சொன்னது.
அவரது ஆட்சி கவிழ்ந்து முகமது யூனுஸ் இடைக்கால தலைவரான பிறகு எல்லாம் மாறி விட்டது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தலையாட்டி பொம்மையாக வங்கதேசம் மாறி விட்டது.
பாகிஸ்தான் ராணுவம், அதன் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சொல்வதை கேட்டு இந்தியாவையே சீண்டி வருகிறது. சீனாவுக்கும் அடிமையாக இருக்கிறது.
இப்படி இந்தியாவை எதிர்க்கும் புள்ளியில் இப்போது மூன்று நாடுகளுமே ஒரே அணியில் நிற்கின்றன.