உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் ஏவுகணை சம்பவம் | india vs pakistan | agni-5 missile | indian army

பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் ஏவுகணை சம்பவம் | india vs pakistan | agni-5 missile | indian army

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் வெடித்த போரில் இந்தியா பெரிய வெற்றியை பெற்றது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை நம் ராணுவம் குண்டு வீசி பந்தாடியதால் அந்த நாடு பயத்தில் பதறியது. வெறும் 4 நாட்களில் போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. இந்த போரில் நம் வெற்றிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது நம்மிடம் இருக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தான். ஏவுகணை பலத்தில் பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு மேம்பட்டது. போருக்கு பிறகு, ஏவுகணை பலத்தை இன்னும் அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை, ஒடிசாவின் சந்திப்பூரில் நேற்று இந்தியா சோதித்து பார்த்தது. நிர்ணயித்த எல்லா இலக்குகளையும் துல்லியமாக அடித்தது அக்னி 5 ஏவுகணை. சோதனை வெற்றி பெற்றதாக இந்தியா அறிவித்தது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மற்றும் சீனா தலையில் இப்போது இடியாக இறங்கி இருக்கிறது. அது ஏன் என்று பார்க்கலாம். இந்தியாவிடம் ஏற்கனவே அக்னி ரக ஏவுகணைகள் பல இருக்கின்றன. உதாரணத்துக்கு அக்னி 1 ரக ஏவுகணை 700 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று இலக்கை தாக்கும். அக்னி-2 ஏவுகணை 2000 கிலோ மீட்டர் வரை பாயும். அக்னி-3, மூன்றாயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும். இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாயும் சக்தி கொண்டது. 5000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாக இலக்கை தாக்கி எதிரிகளை குலைநடுங்க செய்யும். அக்னி வரிசை ஏவுகணைகள் எல்லாமே அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடியது தான். அக்னி 5 ஏவுகணையும் விதி விலக்கல்ல. இதை வைத்து பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளையும், சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்குவது சுலபம். கிட்டத்தட்ட ஆசியாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கலாம். ஐரோப்பா கண்டத்தின் ஒரு பாதியையும் அக்னி-5 ஏவுகணையால் அடிக்க முடியும். மற்ற எல்லா அக்னி ரக ஏவுகணைகளை விடவும் இதன் வேகம் அசுரத்தனமானது. மணிக்கு 29,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென்று தாக்கும். இவ்வளவு வேகத்தில் பறப்பதால் எதிரிகளின் ராடார் இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அக்னி 5 ஏவுகணையின் முக்கிய சிறப்பு, இது மற்ற ஏவுகணைகளை போல ஒரு இலக்கை மட்டும் தாக்காது. ஒரே நேரத்தில் பல இலக்குகளை துல்லியமாக தாக்க கூடியது. அதாவது, ஒரு ஏவுகணைக்குள் பல குண்டுகள் இருக்கும். ஒரே நேரத்தில் எதிரியின் பல இலக்கை குறி வைத்து இதை அனுப்ப முடியும். வரிசையாக ஒவ்வொரு இலக்கிலும் அடுத்தடுத்து துல்லியமாக குண்டு வீசும் சக்தி அக்னி 5 ஏவுகணைக்கு உண்டு. இது தான் எதிரிகளை பதைபதைக்க வைக்கும் முக்கிய அம்சம். அக்னி-5 ஏவுகணையின் உயரம் 17 மீட்டர். 1500 கிலோ வெடிபொருளை சுமந்து செல்லும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கும் அக்னி-5 ஏவுகணை, நம் ராணுவத்தின் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த strategic vision institute என்ற நிறுவனம், அந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் ராணுவத்தை எச்சரித்துள்ளது. இந்தியா அதிசக்தி வாய்ந்த அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இதில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
செப் 12, 2025 05:42

* ஏவுகணைகளில் பாரதம் தான் முன்னோடி. * சீனா மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைகள் லக்ஷணம் OPERATION SINDHOOR ன் போது தெரிந்துவிட்டது. இந்தியா - இன்று - பாகிஸ்தானையும் சீனாவையும் ஒரே வாரத்திற்கும் அடிபணிய வைக்கும் சக்தி உள்ள நாடு ஆகும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை