உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடி வாங்கியும் திருந்தாத பாக் தளபதி அசிம் முனீர் | india vs pakistan | asim munir | kashmir issue

அடி வாங்கியும் திருந்தாத பாக் தளபதி அசிம் முனீர் | india vs pakistan | asim munir | kashmir issue

கராச்சி கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அசிம் முனீர் பேசி இருக்கிறார். அவர் கூறியது: எந்த காரணமும் இன்றி பாகிஸ்தான் மீது 2 முறை இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது அத்து மீறிய செயல். நம் நாட்டை சுற்றி பதற்ற நிலை நிலவுவதற்கு இந்தியா தான் முக்கிய காரணம். இனி எப்போதாவது பாகிஸ்தானை இந்தியா சீண்டினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. பிராந்திய அமைதிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க போராடுகிறது. ஆனால் இந்தியா வேண்டும் என்றே பதற்றத்தை உண்டு பண்ணுகிறது என்று அசிம் முனீர் பேசினார். காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை சீண்டினார். காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இதற்கு எதிராக போராடும் காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி