பாக் மூக்கை வெட்டிய இந்தியா-பரபரப்பு காட்சி India vs Pakistan | kashmir issue | UN security council
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ‛அமைதிக்கான தலைமைத்துவம் என்ற தலைப்பில் சர்வதேச நாடுகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அப்போது தேவையே இல்லாமல் இந்தியாவை சீண்டிய பாகிஸ்தானை உலக நாடுகள் முன்னிலையில் இந்தியா மூக்குடைய செய்தது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி ஆசிம் இஃப்திகார் அகமது, தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் அமைதி ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது என்றார். ஐநா சபை நிகழ்ச்சி நிரலில் இருக்கும் பழமையான தீர்க்கப்படாத சர்ச்சை காஷ்மீர் விவகாரம். இதில் காஷ்மீர் மக்கள் விருப்பத்துக்கு இணங்க நியாயமான தீர்வு தேவை. ஆனால் அதை இந்தியா கிடைக்க விடாமல் செய்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதெல்லாம் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று பாகிஸ்தான் பிரதிநிதி பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார். அவர் பேசியது: பாகிஸ்தான் தனது சொந்த மக்கள் விருப்பத்தையே மதிப்பதில்லை. நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானை ஊழல் வழக்கில் சிறையில் அடைத்தது. அவர் நடத்தி வந்த அரசியல் கட்சியை முடக்கியது. ஆடியலா சிறையில் இம்ரான் கான் சித்திரைவதை செய்யப்படுகிறார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு பற்றி ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். மேலும், ராணுவம் தொடர்பான 27-வது சட்ட திருத்தம் மூலம் அரசியல் அமைப்பில் சதியை அரங்கேற்றினர். ராணுவ தளபதி அசிம் முனீரை, சட்டத்தின் பிடியில் இருந்து வாழ்நாள் முழுதும் பாதுகாக்க செய்தனர். சர்வ அதிகாரத்தையும் ராணுவத்துக்கு வழங்கினர் என்று இந்திய பிரதிநிதி பேசினார். காஷ்மீர் விவகாத்தை இழுத்ததற்கும் பாகிஸ்தானுக்கு அவர் பதிலடி கொடுத்தார். #ImranKhanIssue #IndiaVsPakistan #KashmirIssue #UNSecurityCouncil #PoliticalDebate #SouthAsia #GlobalPolitics #KashmirConflict #PakistaniPolitics #IndianPolitics #InternationalRelations #PeaceProcess #Diplomacy #ConflictResolution #HumanRights #GeoPolitics #SocioPoliticalIssues #BilateralRelations #RegionalStability