உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா சுட்டு தூக்கிய பாக் போர் விமானம்-முக்கிய ஆதாரம் | india vs pakistan | mirage fighter jet

இந்தியா சுட்டு தூக்கிய பாக் போர் விமானம்-முக்கிய ஆதாரம் | india vs pakistan | mirage fighter jet

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி தகர்த்தது இந்தியா. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியதால், பதிலுக்கு நம் முப்படையும் சேர்ந்து மிகப்பெரிய பதிலடியை கொடுத்தன. பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகளை வானிலேயே இந்தியா இடை மறித்து அழித்தது. இந்தியாவுக்கு லேசான சேதம் தான். ஆனால் நம் ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவிடம் பேசி சனிக்கிழமை மாலை போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. சண்டை தீவிரமாக நடந்த போது இந்தியாவின் ரபேல் உட்பட 5 பேர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பகிரங்கமாக பொய் பேசினர். ஆங்கில பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், ஆதாரம் எங்கே என்று ஆங்கர் கேட்க, எல்லா ஆதாரமும் சோசியல் மீடியாவில் இருக்கிறது என்று உலகையே சிரிக்க வைத்தார் கவாஜா. இந்தியாவின் எந்த போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. உலகை ஏமாற்றுவதற்காக மிகப்பெரிய பொய்யை இப்படி பாகிஸ்தான் கட்டவிழ்த்து விட்டது. அதே நேரம் பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இதை முப்படை அதிகாரிகள் அளித்த பேட்டியின் போது உறுதி செய்தனர். பாகிஸ்தானின் போர் விமானத்தை நம் வான் தடுப்பு கவசம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறினர். இது தொடர்பான ஆதாரத்தையும் காட்டினர். அதில் விமானம் நொறுங்கி கிடக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இப்போது அதை நொறுக்கி போட்டது தொடர்பான வீடியோவையும் நம் ராணுவம் வெளியிட்டு உள்ளது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை